Uthayan
Virakesari
 • Untitled
Nakkeeran
Tamilwin
Tamil Mirror
Puthinappalakai
ThatsTamil
 • சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெ. விடுதலையாக 1008 விளக்கு பூஜை – உபயம்: பா.வளர்மதி!
  சென்னை: அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா விரைவில் வழக்கிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று வேண்டி அமைச்சர் பா.வளர்மதி சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 1008 விளக்கு பூஜை வழிபாடு செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது […]
 • நாளை முதல் பெங்களூர் அல்ல.. பெங்களூரு; மைசூர் அல்ல.. மைசூரு!
  பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது. அதேபோல மைசூர் என்ற பெயரும் மைசூரு என்று மாற்றப்படுகிறது. இவை மட்டுமல்ல கர்நாடகத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்களும் பழைய கன்னட பெயர்களுக்கே நாளை முதல் மாற்றம் பெறுகின்றன. இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை […]
 • காங். தலைமைக்கு எதிராக மேலும் ஒரு வாசன் ஆதரவாளர் விலகல்- கோவை தங்கம் ராஜினாமா!
  கோவை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் திடீரென விலகியுள்ளார். இவர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர் ஆவார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியுள்ள நிலையில் 2வது வாசன் ஆதரவாளராக கோவை தங்கம் விலகியுள்ளார். இது தொடர்பாக கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில […]
 • ஞானதேசிகன் நியாயமானவர் என்றால் சத்தியமூர்த்தி, கக்கன் படத்தை போட்டிருக்கலாமே.. பேஸ்புக்கில் ஒரு சூடு
  சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் நியாயமானவராக இருந்திருந்தால் உறுப்பினர் அட்டையில் தீரர் சத்தியமூர்த்தி, கக்கன் ஆகியோரது படத்தையெல்லாம் போட்டிருக்கலாமே. ஏன் அதை அவர் செய்யவில்லை என்று வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். கட்சியில் மரியாதை இல்லை, தலைமை மதிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியுள்ளார் […]
 • எம்.ஹெச். 370- அப்பா எங்கே?: மலேசியன் ஏர்லைன்ஸ், அரசு மீது 2 சிறுவர்கள் வழக்கு
  கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் 2 மகன்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் […]
 • கருவில் இருக்கும் சிசுவுக்கு “இதய அறுவை சிகிச்சை” – ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை
  ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது இந்த புதிய முறை அறுவை சிகிச்சை. இந்த அறுவைச் சிகிச்சை மூலம், சிரிஷா எனும் 25 வயது பெண்ணின் கருவில் இருந்த சிசுவின் இதய ரத்தகுழாய் […]
 • மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
  மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக-சிவசேனா இடையேயான 25 ஆண்டுகால கூட்டடணி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போது முறிந்தது. இதனைத்தொடர்ந்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதேபோல் காங்கிரஸ்-தே […]
 • தமிழக மீனவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை ஆதீனம்
  மதுரை: இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற 5 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் பல்லாண்டு காலமாகவே பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என […]
 • அய்யகோ! ஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனையா? ‪- கருணாநிதி அதிர்ச்சி!
  சென்னை: இலங்கை அரசுடன் மத்திய அரசு உடனடியாக பேசி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், […]
 • 22 வயதில் கவுன்சிலர், 27ல் மேயர், 44ல் மகாராஷ்டிரா முதல்வர் ஆன தேவேந்திர பட்னாவிஸ்
  மும்பை: நாக்பூர் எம்.எல்.ஏ. தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் 27வது முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பாஜக அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்(44) முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய முதல்வர் பட்னாவிஸ் யார் என்று பார்ப்போம் […]
BBC Tamil